என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அடித்து கொலை
நீங்கள் தேடியது "அடித்து கொலை"
முசிறி அருகே வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் ஊதா நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். அவருடைய உடல் அருகே முட்புதரில் ரோஸ் நிற சட்டை கிடந்தது. மேலும் பதிவு எண் இல்லாத மொபட் ஒன்றும், அங்கு சாய்ந்த நிலையில் கிடந்தது. இறந்து கிடந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று போலீசார் கருதினர். மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எந்த பகுதியிலாவது வைத்து அடித்து கொலை செய்து, உடலை இங்கே கொண்டு வந்து வீசியிருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.
முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இறந்து கிடந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பது குறித்து சுற்றுப்புற கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அடித்து கொன்றது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி அருகே வனப்பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த பாலி கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்கரதாரி (வயது 60). என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே கர்நாடக வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள அயர்னப்பள்ளி ஊராட்சிக்குபட்ட நல்லராளபள்ளி பகுதியில் உள்ள முனியப்பன் என்பவர் விவசாய நிலத்தில் மரத்தில் ஒரு வாலிபர் தூக்குபோட்டு பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிரிச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதியினர் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சொட்டு நீர் பாசனம் செய்யும் பைப்பில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் தூக்கில் பிணமாக கிடந்தவர் கர்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது33) என்பது தெரியவந்தது. இவர் ஏலசீட்டு நடத்தி வந்ததும், அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நல்லராளபள்ளியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகள் பவித்ராவை திருமணம் செய்ததும், அவருக்கு 4 வயதில் எஸ்வந்த் என்ற மகனும், 2 வயதில் தனு என்ற மகனும் உள்ளது என்பது தெரிகிறது.
தூக்குபோட்டு பிணமாக கிடந்த இடத்தில் அருகில் மதுபாட்டில்கள், ஆசிட் போன்றவைகள் கிடந்தது. பின்னர் முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து முனிராஜ் தற்கொலை செய்தாரா? அல்லது மது அருந்திய போது தகராறு ஏற்பட்டு அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்கில் பிணமாக கிடந்த முனிராஜ் முழுவிபரம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
வேப்பூர் அருகே மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக தொங்கினார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மரங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு மரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இதுகுறித்து வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மரத்தில் தொங்கியவரின் உடலை மீட்டனர். அவர் யார்? எந்த ஊர் என்ற விவபரம் தெரியவில்லை.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரை யாராவது அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்கவிட்டார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X